» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாணவி குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு: அரசு கல்லூரி பெண் முதல்வர்,கணவருடன் கைது
புதன் 7, ஜனவரி 2026 8:09:34 AM (IST)
மாணவி குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பியதாக நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி பெண் முதல்வர் தனது கணவருடன் கைது செய்யப்பட்டார்.
நெல்லை பழையபேட்டையில் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் முதுகலை 2-ம் ஆண்டு தமிழ் படிக்கும் மாணவி ஒருவர், ஆசிரியர் ஒழுங்காக பாடம் நடத்தவில்லை என்று யூடியூப்பில் பேசியிருந்தார்.இதுகுறித்து அந்த மாணவியை பற்றி சமூகவலைதளங்களில் அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, அந்த மாணவி கடந்த மாதம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதில், தமிழ்த்துறை தலைவராக இருந்த சுமிதா (தற்போதைய கல்லூரி பொறுப்பு முதல்வர்) சமுகவலைதள பக்கத்தில் இருந்தே அவதூறு கருத்துகள் பதிவு செய்யப்படுவதாக தெரிவித்து இருந்தார்.
பின்னர் அந்த மனு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மாணவியின் புகார் குறித்து நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், கல்லூரி முதல்வர் (பொறுப்பு)சுமிதாவும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றும் அவரது கணவர் பொன்னுதுரையும் அவதூறு, ஆபாச கருத்துக்களை பதிந்து பரப்பியது தெரியவந்தது.
இதையடுத்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் செந்தாமரை கண்ணன் நேரடி மேற்பார்வையில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப்-இன்ஸ்பெக்டர் கலை சந்தனமாரி ஆகியோர் நேற்று காலையில் சுமிதா, பொன்னுதுரை ஆகியோரிடம் சைபர் கிரைம் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
நீண்ட நேர விசாரணைக்கு பிறகு, 2 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நெல்லையில் பெண் ஒருவர் யூடியூப்பில் பேசியது குறித்து ஆபாசமாக கருத்து பதிவிட்டது சம்பந்தமாக சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி 2 பேரை கைது செய்து உள்ளோம். பொதுமக்கள் இணைய வழி குற்றங்களால் பாதிக்கப்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் புகார் அளிக்கலாம்’ என்று கூறி உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மருத்துவ மாணவி மர்ம மரணம்: போலீசார் விசாரணை
வியாழன் 8, ஜனவரி 2026 8:13:47 AM (IST)

சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குப்பதிவு: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
புதன் 7, ஜனவரி 2026 4:23:14 PM (IST)

ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
புதன் 7, ஜனவரி 2026 11:08:37 AM (IST)

சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் கண்காட்சி அரங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 6, ஜனவரி 2026 3:53:57 PM (IST)

திமுக அரசை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்: நெல்லையில் 401 பேர் கைது!
செவ்வாய் 6, ஜனவரி 2026 3:47:24 PM (IST)

சிறுமியை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
செவ்வாய் 6, ஜனவரி 2026 8:35:18 AM (IST)

