» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்ட வளர்ச்சி திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தல்!
செவ்வாய் 21, நவம்பர் 2023 5:12:47 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் தலைமையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் தலைமையில், மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் உள்@ர் பகுதி வளர்ச்சித் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், தேசிய சுகாதார திட்டம், தீன தயாள் உபாத்தியாய கிராம மின்வசதி திட்டம், இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய ஊனமுற்றோர் ஓய்வூதியத் திட்டம், அந்தியோதயா அன்னயோஜனா திட்டம், தேசிய நில ஆவணங்கள் கணினி மயமாக்கல் திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், தேசிய நெடுஞ்சாலை திட்டம், தேசிய மின் ஆளுமை திட்டம், பிரதம மந்திரி கிராம முன்னேற்ற திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம், தூய்மை பாராத இயக்கம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், வேளாண்மைத்துறை, வனத்துறை, மருத்துவத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உட்பட பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மாவட்டத்தில் செயல்படுத்திவரும் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலன் கருதி விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் மேலும், மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும். இத்திட்டங்கள் அனைத்தும் சிறந்த முறையில் செயல்படுத்தி பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடையும் விதத்தில் அரசு அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என குழுவின் தலைவர் மற்றும் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, உதவி ஆட்சியர் (பயிற்சி) கிஷன்குமார்.சீ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ், மானூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ஸ்ரீலேகா, களக்காடு நகராட்சி தலைவர் சாந்தி, அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.