» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலத்தில் தை அமாவாசை தர்ப்பணம் : பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது!

வெள்ளி 9, பிப்ரவரி 2024 4:40:21 PM (IST)குற்றாலத்தில் தை அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. 

தை மாத அமாவாசையில் நீர் நிலைகளில் நீராடி தங்களின் மூதாதையர்களை நினைத்து வழிபாடு நடத்துவதும், தர்ப்பணம் செய்வதும் வழக்கம். மூதாதையர் ஆன்மா சாந்தி பெறவும், ஆன்மா புகலிடம் பெறவும் தை மற்றும் ஆடி மாத அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், குற்றாலம் மெயின் அருவியில் தை அமாவாசையை முன்னிட்டு இன்று தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. 

அருவியில் மக்கள் புனித நீராடி, அப்பகுதியில் அமர்ந்திருந்த புரோகிதர்கள் மூலம் பொதுமக்கள் தங்களின் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். புரோகிதர்கள் கொடுத்த எள், நீரை மெயின் அருவியில் இருந்து வெளியேறிய தண்ணீரில் விட்டு வழிபாடு நடத்தினர். தர்ப்பணம் முடிந்ததும் பொதுமக்கள் செண்பக விநாயகர் கோயில், குற்றாலநாதர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory