» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தினசரி மார்க்கெட்டில் கணித செய்முறை தேர்வு நடத்திய சாதனா வித்யாலயா பள்ளி !
சனி 10, பிப்ரவரி 2024 5:45:25 PM (IST)

சாதனா வித்யாலயா மாணவர்கள் ஒவ்வொரு மாதம் களப்பயணம் சென்று வாழ்கைக் கல்வியை கற்றுக்கொடுப்பது வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு நேற்று நடைபெற்ற களப்பயணத்தில் கடையநல்லூர் தினசரி மார்க்கெட் சென்றனர். கணித பாடத்தில் செய்முறை தேர்வு நடைபெற்றது.
செய்முறை தேர்வில் ஒவ்வொரு மாணவர்களும் நூறு ரூபாய்க்கு காய்கறிகள் வாங்க வேண்டும். நூறு ரூபாயில் மீதம் கொண்டு வரக்கூடாது. ஒவ்வொரு கடையிலும் தங்களுக்கு தேவையான காய்கறிகள் பழங்கள் வாங்க வேண்டும். வாங்கும் காய்கறிகளுக்கு சரியான விலை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் செய்முறை தேர்வு நடைபெற்றது.
ஒவ்வொரு மாணவர்களும் தேசிய பசுமைப் படை மாணவர்களின் ஆலோசனையின் படி தங்கள் வீட்டில் உள்ள துணி பையில் காய்கறிகளை ஆர்வமுடன் வாங்கச் சென்றன. கடைக்காரரிடம் விலைப்பட்டியல் காய்கறிகளின் தரம் உற்பத்தியான இடம் போன்ற கேள்விகளை கேட்டு அறிந்தனர். பத்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியை என்றவிகிதத்தில் ஒரு கடைக்கு சென்று காய்கறிகளை வாங்கினார்கள்.
ஒவ்வொரு மாணவர்களும் தங்களை அறிமுகம் செய்து கடைக்காரரிடம் விலை கேட்டு தங்களுக்குத் தேவையான காய் கறிகள் வாங்கும் விதம் அழகு. தேங்காய் வாங்கும் பொழுது ஒரு மாணவன் தட்டிப் பார்த்து வாங்கும் காட்சியை ஆசிரியர்கள் கண்டனர். சில மாணவர்கள் மீதமுள்ள ஐந்து ரூபாய்க்கு என்ன வாங்குவது என்று திகைத்தனர். ஐந்து ரூபாய்க்கு என்ன காய்கறி வாங்குவது என்று ஆலோசனை செய்து எலுமிச்சம் பழம் வாங்கி சென்றனர். தினசரி மார்க்கெட்டில் காய்கறி கடையில் செய்முறை தேர்வு நடத்திய பள்ளியையும் மிக ஆர்வமாக சென்று காய்கறி மற்றும் பழங்களை வாங்கி தங்கள் தேர்வை நிறைவு செய்த மாணவர்களையும் காய்கறி மார்க்கெட்டின் வர்த்தக சங்கத் தலைவர் லட்சுமணன் பாராட்டு தெரிவித்தார்.
மாணவர்கள் வாங்கிய காய்கறிகளை பள்ளியில் தங்கள் வகுப்பறையில் காட்சிப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாணவர்களும் எத்தனை காய்கறிகள் வாங்கியுள்ளனர். அதன் விலைப்பட்டியல் போன்றவற்றை வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்து தங்களுடைய மதிப்பெண் பெற்றனர்.
இந்நிகழ்வுக்கு பள்ளி முதல்வர் மயில்கண்ணு ரமேஷ் அவர்கள் தலைமை தாங்கினார்.சமூக அறிவியல் ஆசிரியை மாரியம்மாள், அறிவியலாசிரியர் முருகன் முன்னிலையில் நடைபெற்றது. கணித ஆசிரியை சிந்துஜா, மகேஸ்வரி, சண்முகப்பிரியா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி கணித செய்முறை தேர்வு சிறப்பாக நடைபெற்றது. இறுதியாக தாளாளர் ரமேஷ் நன்றி கூறினா
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
புதன் 17, செப்டம்பர் 2025 10:31:00 AM (IST)

கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 8:33:36 AM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)
