» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: 2 பேர் கைது

திங்கள் 12, பிப்ரவரி 2024 8:02:28 AM (IST)

நெல்லை அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பா 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை பாளையங்கோட்டை மனக்காவலன்பிள்ளை நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் பாபுசெல்வம் என்ற விஸ்வாசம் (20). வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலையில் கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நெல்லை அருகே ரெட்டியார்பட்டி மலை அடிவாரத்தில் உள்ள சாய்பாபா கோவில் அருகே வாலிபர் ஒருவர் மர்மகும்பலால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின்படி துணை கமிஷனர் ஆதர்ஷ்பசேரா, இன்ஸ்பெக்டர்கள் சண்முகவடிவு, சுந்தரி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் கொலை செய்யப்பட்டு கிடந்தது பாபு செல்வம் என்பது தெரியவந்தது.

போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மகும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்த மாரிஜெகன் என்பவர் கடந்த 28-ந் தேதி அந்த வழியாக வந்த முத்துவேலு என்பவரிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மாரிஜெகன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து முத்துவேலை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. அவர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தில் மாரிஜெகனுக்கு ஆதரவாக பாபு செல்வம் செயல்படுவதாக முத்துவேலின் உறவினர் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அருணாசலம் கருதினார். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

நேற்று முன்தினம் அருணாசலம், அரியகுளத்தை ேசர்ந்த சந்துரு, சாந்திநகரைச் சேர்ந்த மகாபிரபு, அன்பு, சிவபெருமாள், கார்த்திக் பாண்டியன் ஆகியோர் பாபு செல்வத்தை மது குடிக்க அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. எனினும் கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த கொலை தொடர்பாக சந்துரு, மகாபிரபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அருணாசலத்தை வலைவீசி தேடி வருகிறார்கள். நெல்லை அருகே வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory