» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பிரதமர் வருகையை முன்னிட்டு நெல்லையில் டிரோன் பறக்க தடை!

செவ்வாய் 27, பிப்ரவரி 2024 11:25:03 AM (IST)

பிரதமர் வருகையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பிரதமர் திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாநகர பகுதி பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள 28.02.2024 அன்று வருகை தர உள்ளார்கள். பிரதமர் வருகையைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் டிரோன் விதிகள் 2021-ன்படி  பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 27.02.2024 மற்றும் 28.02.2024 ஆகிய நாட்களில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதிலும் அனைத்து வகை ஆளில்லா வானூர்தி (Drone and unmanned aerial aircraft) பறப்பதற்கு தடை செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory