» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி எம்.பி. போட்டியிட அமைச்சர்கள் விருப்ப மனு

சனி 2, மார்ச் 2024 8:27:03 AM (IST)

வருகிற நாடாளுமன்ற தேர்தலில்  கனிமொழி எம்.பி. மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி அமைச்சர்கள் விருப்பமனு வழங்கினர்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தி உள்ளது. முதல்கட்டமாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியையும் தி.மு.க. ஒதுக்கி உள்ளது. அதேபோல், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலில் தலா 2 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.

தற்போது, தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்களுக்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்வு நேற்று தொடங்கியது. முதல்நாளான நேற்று, தி.மு.க. எம்.பி. கனிமொழி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி, தி.மு.க தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில், தமிழ்நாடு மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விருப்பமனுவை பூர்த்தி செய்து ரூ.50 ஆயிரம் கட்டணத்துடன் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் வழங்கினார். 

அதேபோல், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் வர்த்தகரணி இணை செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரிஷங்கர் உள்பட 38 பேர் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட வேண்டும் என்று விருப்பமனு வழங்கினர். மேலும், தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்.பி. போட்டியிட வேண்டும் என்று தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் 12 பேர் விருப்பமனுக்களை நேற்று வழங்கினார்கள்.


மக்கள் கருத்து

விடியல் படையல் வடை யல்Mar 3, 2024 - 03:13:54 PM | Posted IP 162.1*****

மக்களே பாருங்க மீண்டும் மதுவிலக்குப் போராளி, நீட் ஒழிக்க வந்தாரு அப்படியே அறுத்துத் தள்ள போறாரு

இது என்ன பிழைப்புMar 3, 2024 - 03:11:36 PM | Posted IP 162.1*****

தூத்துகுடில பிறந்த MP வேற ஆள் இல்லையா? அவங்க குடும்பம் மட்டும் MP ஆகணுமா? அவரு சொந்த ஊரு சென்னை, பதவிக்காக மட்டும் தூத்துக்குடிக்கு மட்டும் ஓட்டு வேணுமாம், பிறந்த சொந்த ஊரு தொகுதியில் நிற்க வேண்டியது தானே. இங்கு கொத்தடிமைகள் , முட்டாள்கள் அதிகம் அதனாலே MP பதவிக்காக மட்டும் இங்கே வந்து போக வேண்டியிருக்கு. எல்லாம் திருட்டு பதவி புத்தி.

NameMar 2, 2024 - 05:12:57 PM | Posted IP 172.7*****

Ottu yaru podurathu

MakkalMar 2, 2024 - 02:32:26 PM | Posted IP 172.7*****

Winning Candidate Kanimoli

தமிழ்ச்செல்வன்Mar 2, 2024 - 10:10:23 AM | Posted IP 172.7*****

இங்கே மண்ணின் மக்கள் யாரும் இல்லையா? கனிமொழியைத் தவிர வேறு நாதியே இல்லையா? அடிமைகளின் கூடாரம்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory