» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:11:14 AM (IST)

நெல்லையில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் ஜோபின் சாலமோன் (29). இவர் கடந்த 3 ஆண்டுகளாக 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் எடுத்து வந்தார்.

ஜோபின் சாலமோன் வகுப்பறையில் பாடம் நடத்தும்போது மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கல்வி தொடர்பான வாட்ஸ்-அப் குழுவில் உள்ள மாணவிகளின் எண்களைத் தனியாக எடுத்து, இரவு நேரங்களில் குறுஞ்செய்தி அனுப்பித் தொல்லை கொடுத்ததாகவும் புகார்கள் எழுந்தன.

இது குறித்துப் பள்ளி நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக அவர் மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory