» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ரயில்வே பெண் ஊழியரைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை!
சனி 14, பிப்ரவரி 2026 8:25:03 AM (IST)
ரயில்வே கேட்டில் பணியில் இருந்த பெண் ஊழியரைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற வாலிபருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் 'கேட் கீப்பராக' (Gate Keeper) கடந்த 2023-ம் ஆண்டு பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இரவு நேரத்தில் அவர் தனது அறையில் இருந்தபோது, மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். அவரிடமிருந்து தப்பித்த பெண் ஊழியர், இது குறித்து தென்காசி ரயில்வே போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், பெண் ஊழியரைத் தாக்க முயன்றவர் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பத்தனபுரம் தாலுகாவைச் சேர்ந்த அனீஸ் (27) என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ராஜவேல் நேற்று தீர்ப்பளித்தார். அனீஸ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதியானதால், அவருக்கு: 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை.ரூ. 2,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
அனீஸ் ஏற்கனவே கேரளாவின் குன்னிகோடு பகுதியில் ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கிற்காக அவர் திருவனந்தபுரம் மத்திய சிறையிலிருந்து தென்காசிக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கவிதா ஆஜரானார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாளையங்கோட்டையில் ரூ.5.06 கோடியில் மரபணு ஆய்வகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 14, பிப்ரவரி 2026 12:18:28 PM (IST)

சுகாதாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி: 2 பெண்கள் கைது!
சனி 14, பிப்ரவரி 2026 8:19:00 AM (IST)

சிவன் கோவில்களில் நாளை மகா சிவராத்திரி விழா: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நெல்லையப்பர் கோவில்!
சனி 14, பிப்ரவரி 2026 8:09:54 AM (IST)

பிப்.14ல் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் : ஆட்சியர் தகவல்
வியாழன் 12, பிப்ரவரி 2026 5:21:45 PM (IST)

சிலம்பு எக்ஸ்பிரசை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும்: மத்திய அமைச்சரிடம் தென்காசி எம்.பி. கோரிக்கை!
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:02:53 PM (IST)

தீராக்காதல் திருக்குறள் நாட்டிய நாடக நிகழ்ச்சி : சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 5:03:39 PM (IST)

