» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:18:01 PM (IST)

திருநெல்வேலியில் கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தையொட்டி கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இக்கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கையின் தன்மைக்கேற்ப மனுக்கள் பதிவு செய்யப்பட்டதோடு, அம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொது பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து மனுக்களை பரிசீலனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும், கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தையொட்டி கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை சார்பில் தொழிலாளர் நலவாரியத்தின் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி திட்டத்திற்காக தலா ரூ.2,96,190/- மதிப்பில் 13 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1.05 இலட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் வீல்சேர் ஒரு பயனாளிக்கும், ரூ.6,350/- மதிப்பிலான தையல் இயந்திரம் ஒரு பயனாளிக்கும், தலா ரூ.13,500/- மதிப்பில் ஸ்மார்ட் போன் 5 பயனாளிகளுக்கும் என நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை, தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சுமதி, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மணிகண்டன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜெயா உட்பட துறைசார்ந்த அலுலவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகாசிவராத்திரி விழா: பஞ்சபூத திருத்தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 10:24:45 AM (IST)

கல்லிடைக்குறிச்சி அரபிக் கல்லூரி முதல்வருக்கு பாராட்டு விழா!
திங்கள் 9, பிப்ரவரி 2026 7:39:59 AM (IST)

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17-ல் தாக்கல்: பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!
சனி 7, பிப்ரவரி 2026 4:03:18 PM (IST)

நெல்லையில் பொருநை புத்தகத் திருவிழா பிப்.10ஆம் தேதி தொடக்கம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
சனி 7, பிப்ரவரி 2026 12:27:12 PM (IST)

வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:35:42 PM (IST)

