» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மகாசிவராத்திரி விழா: பஞ்சபூத திருத்தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 10:24:45 AM (IST)
மகாசிவராத்திரியை முன்னிட்டு பஞ்சபூத தலங்கள் திருக்கோவில்களுக்கு சிறப்பு சேவைபேருந்துகள் இயக்கம் திருநெல்வேலி மண்டல பொது மேலாளர் சிவகுமார் தகவல்
15.02.2026 அவன்று மகாசிவராத்திரியை முன்னிட்டு பஞ்சபூத தலங்கள் திருக்கோவில்களுக்கு சென்று வர பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு பேருந்துகள் இயக்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி மண்டலம் மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பஞ்சபூத தலங்களுக்கு, 15.02.2026 அன்று மாலை 06.00 மணிக்கு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்தும் மாலை 07.00 மணிக்கு சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்தும் பேருந்துகள் புறப்பட்டு 1) தாருகாபுரம் 2) சங்கரன்கோயில் 3) கரிவலம்வந்தநல்லூர் 4) தென்மலை 5) தேவதானம் ஆகிய பஞ்சபூத தலங்களுக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், மற்றும் சங்கரன்கோவில் பேருந்து நிலையங்களில் இருந்து இச்சிறப்பு சேவை பேருந்துகளுக்கு. இன்று முதல் 14.02.2026 வரை காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை அனைத்து நாட்களிலும் முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
(திருநெல்வேலி தொடர்புக்கு 8144625265)
(சங்கரன்கோவில் தொடர்புக்கு : 96008 27070)
இணையதளம் முன்பறிவு : www.tnstc.in மூலம் முன்பதிவு செய்யலாம்
இதற்கான பயணக்கட்டணத் தொகை
திருநெல்வேலியில் இருந்து நபர் ஒன்றுக்கு ரூ.300/- ஆகும்.
சங்கரன்கோவிலில் இருந்து நபர் ஒன்றுக்கு ரூ.200/- ஆகும்
மேலும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 15.02.26 அன்று நவகைலாய திருத்தலங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் மாலை 6.00 மணிக்கு இயக்கப்படும்.இதற்கான பயணக்கட்டணத் தொகை, நபர் ஒன்றுக்கு ரூ.600/- ஆகும். எனவே, இந்த சிறப்பு பஞ்சபூத தலங்கள், நவகைலாய திருத்தலங்களுக்கு இயக்கப்படும் பேருந்து சேவைகளை பயன்படுத்தி பயன்பெறுமாறு பொதுமக்கள் கொள்ளப்படுகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல்துறையில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம்? ஷியாம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
செவ்வாய் 10, மார்ச் 2026 3:14:37 PM (IST)

நெல்லை - மங்களூரு புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
செவ்வாய் 10, மார்ச் 2026 7:59:23 AM (IST)

தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றிட வேண்டும்: மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்
சனி 7, மார்ச் 2026 3:44:13 PM (IST)

திருநெல்வேலி- மங்களுர் புதிய வாராந்திர ரயில் அறிவிப்பு: கன்னியாகுமரி பயணிகள் ஏமாற்றம்!
சனி 7, மார்ச் 2026 11:34:43 AM (IST)

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி முறையீடு
வெள்ளி 6, மார்ச் 2026 5:32:10 PM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:03:06 AM (IST)

