» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மொபட் மீது பைக் மோதல் : இளம்பெண் உள்பட 2 பேர் படுகாயம்
வெள்ளி 29, மார்ச் 2024 8:19:57 AM (IST)
ஆறுமுகநேரி மொபட் மீது பைக் மோதிய விபத்தில் இளம்பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவை சேர்ந்தவர் அகமது இப்ராஹீம். இவரது மனைவி ஜெயினுள் அரபா (25). இவர் மொபட்டில் நேற்று காயல்பட்டினத்தில் இருந்து ரத்தினபுரியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு ெசன்றார். அங்கு மொபட்டிற்கு பெட்ரோல் போட்டு கொண்டு, காயல்பட்டினம் நோக்கி மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது காயல்பட்டினம் ரோட்டில் அமைந்துள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் அருகே வந்தபோது காயல்பட்டினத்திலிருந்து ஆறுமுகநேரி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஜெயினுள் அரபா பலத்த காயமடைந்தார். அதேபோன்று மோட்டார் ைசக்கிளை ஓட்டி வந்த வாலிபரும் சாலையில் பலத்த காயங்களுடன் விழுந்துகிடந்தார். இந்த விபத்தில் மொபட்டும், மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்தன.
இவ்விபத்தில் படுகாயம் அடைந்த ஜெயினுல் அரபா காயல்பட்டினம் அரசு மருத்துவமனையிலும், அந்த வாலிபர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த ஆறுமுகநேரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்து காயமடைந்தவர் ஆறுமுகநேரி பேயன்விளை புதூர் முத்து மகன் கண்ணன் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)

பாளையங்கோட்டை சிறையில் போக்சோ கைதி தற்கொலை விவகாரம்: டி.ஐ.ஜி. விசாரணை
வியாழன் 16, அக்டோபர் 2025 7:52:58 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

பாளை. மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை: போக்சோ வழக்கில் கைதானவர்
புதன் 15, அக்டோபர் 2025 8:46:52 AM (IST)

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)
