» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தை தென்காசியில் தொடங்குகிறார் கி.வீரமணி
சனி 30, மார்ச் 2024 5:19:38 PM (IST)
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக வருகிற 2-ஆம் தேதி தென்காசியில் தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். இவர் தனது பிரசாரத்தை வருகிற 2-ஆம் தேதி தென்காசியில் தொடங்கி ஏப்ரல் 17-ஆம் தேதி தஞ்சாவூரில் நிறைவு செய்கிறார். அவரது சுற்றுப்பயண திட்டமும் தயாராகி உள்ளது.
வருகிற 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தென்காசியில் தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கும் அவர், அன்று இரவு 8 மணிக்கு திருநெல்வேலியில் பிரசாரம் செய்கிறார். 3-ஆம் தேதி தூத்துக்குடி, விருதுநகரிலும், 4-ஆம் தேதி ஆண்டிப்பட்டி, மதுரையிலும், 5-ஆம் தேதி பழனி, உடுமலைப்பேட்டையிலும், 6-ஆம் தேதி கோவை, மேட்டுப்பாளையத்திலும், 7-ஆம் தேதி சத்தியமங்கலம், கோபி செட்டிப்பாளையத்திலும், 8-ஆம் தேதி சேலம், அரூரிலும் முதல்கட்ட பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
பின்னர் கி.வீரமணி தனது 2-வது கட்ட பிரசாரத்தை வருகிற 10-ஆம் தேதி மாலை 6 மணிக்கு அரக்கோணத்தில் தொடங்கும் அவர் அன்று இரவு 8 மணிக்கு திருவள்ளூரில் பிரசாரம் செய்கிறார். 11-ஆம் தேதி அம்பத்தூர், வடசென்னையிலும், 12-ஆம் தேதி திண்டிவனம், தியாக துருவத்திலும், 13-ஆம் தேதி ஜெயங்கொண்டம், பெரம்பலூரிலும், 14-ஆம் தேதி துறையூர், திருச்சியிலும், 15-ஆம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினத்திலும், 16-ஆம் தேதி அறந்தாங்கி, பேராவூரணியிலும் பிரசாரம் செய்யும் அவர், 17-ஆம் தேதி தஞ்சாவூரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
மக்கள் கருத்து
SOORIYANMar 31, 2024 - 04:38:13 PM | Posted IP 162.1*****
இந்த ஆள் பிரச்சாரத்துக்கு வந்தால் DMK க்கு பலவீனம்.......
மக்கள்Mar 31, 2024 - 09:24:29 PM | Posted IP 172.7*****