» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு : வெறிச்சோடிய வாக்குச்சாவடிகள்!

வெள்ளி 19, ஏப்ரல் 2024 10:47:53 AM (IST)



தூத்துக்குடி அருகே பொட்டலூரணியில் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளதால் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடின.

தூத்துக்குடி அருகே உள்ள ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட பொட்டலூரணி கிராமத்தில் ராணுவம் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர் அதிகம் வசித்து வருகின்றனர். இங்கு 1100 பேர் வாக்களிக்க தகுதி உடையவர்களாக உள்ளனர். 

இந்த கிராமத்தைச் சுற்றி 3 தனியார் மீன் பதப்படுத்தும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .

எனவே இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை இந்த பிரச்னைக்கு தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மக்களவைத் தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க முடிவு செய்து, கிராமத்தில் வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பொட்டலூரணியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வாக்குசாவடிக்குச் சென்று பார்வையிட்டார். மேலும் வாக்களிக்க வருபவருக்கு ஏதேனும் பிரச்னை ஏற்படாமல் தடுக்க அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


மக்கள் கருத்து

சேதுபதிApr 22, 2024 - 11:34:42 AM | Posted IP 162.1*****

இந்த அரசியல்வாதிகள் எவ்வளவு மக்கள் சேவை செய்பவர்கள் என்று இதில் இருந்து தெரிகிறது

சுகுமாரன்Apr 19, 2024 - 10:01:17 PM | Posted IP 172.7*****

இது ஸ்டெர்லைட் அல்ல.நச்சு ஆரையை அகற்றவே எவ்வளவு துயரங்கள்.

S வீரபாண்டியன்Apr 19, 2024 - 04:08:36 PM | Posted IP 172.7*****

தேர்தல் காலத்தில் கூட மக்கள் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத அரசு இயந்திரங்களின் நிலை கவலைக் குறியது. வெற்றி பெற்ற அரசியல்வாதியும் வழக்கம் போல் காணாமல் போவது திண்ணணம். வாக்குறுதிகள் பலவற்றை அள்ளித் தெளித்து வெற்றி பெற்ற MLA எங்கே. தோற்றுப் போன வேட்பாளரும் வரவில்லையே.... இவர்கள் தான் மக்கள் சேவகனாம்....!!!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory