» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: 29 வழக்குகள் பைசல்

திங்கள் 8, ஜூலை 2024 8:04:47 AM (IST)தென்காசியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 29 வழக்குகள் சுமூகமாக  முடித்து வைக்கப்பட்டது.  

தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.  திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும்  மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு  தலைவர் வழிகாட்டுதலின் படி நடைபெற்ற  மக்கள் நீதிமன்றத்திற்கு தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி  ராஜவேல் தலைமை தாங்கினார்.  தென்காசி முதன்மை சார்பு நீதிபதி மற்றும் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் கிறிஸ்டல் பபிதா முன்னிலை வகித்தார்.  

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர்கள்,   வழக்கறிஞர்கள் மற்றும்  வழக்கில் சம்பந்தப்பட்ட பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.   இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தென்காசி, இலஞ்சி, வீராணம், கடையநல்லூர், பாவூர்சத்திரம், மற்றும் சுரண்டை  வங்கி கிளைகளில் இருந்து வழக்குத் தொடரப்பட்ட 29 வழக்குகள் சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது.    இவற்றில் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.  மற்ற 28  வழக்குகள்  நீதிமன்றத்தில் தாக்கல் மட்டும் செய்யப்பட்ட வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory