» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி...!

திங்கள் 8, ஜூலை 2024 5:38:21 PM (IST)



கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அணுமின் நிலையத்தில் 2 உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இவற்றின் மூலம் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தொடர்ந்து அவ்வப்போது பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். 

அதன்படி 2-வது அணு உலையில் கடந்த மே மாதம் 13-ந்தேதி வருடாந்திர பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த பராமரிப்பு பணி முடிந்து இன்று காலை 5.05 மணிக்கு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. தற்போது 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும், படிப்படியாக இன்று மாலைக்குள் மின் உற்பத்தி ஆயிரம் மெகாவாட்டை எட்டும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

ஏற்கனவே முதல் அணு உலையில் வழக்கம்போல் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், 5 மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுவதற்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory