» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் : ஆட்சியர் கார்த்திகேயன் தகவல்!
வியாழன் 11, ஜூலை 2024 5:56:01 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உடல் நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பான மருத்துவ முகாம் வருகிற 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, ஊரக பகுதிகளில் சுகாதாரம் தொடர்பான தூய்மை பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு (தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் பள்ளி பராமரிப்பு தூய்மை பணியாளர்கள்) உடல் நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பான மருத்துவ முகாம் 13.07.2024 அன்று 9.00 மணிக்கு அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, களக்காடு, மானூர், நாங்குநேரி, பாளையங்கோட்டை, பாப்பாக்குடி, இராதாபுரம் மற்றும் வள்ளியூர் ஆகியஅனைத்து ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
எனவே, தூய்மை பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்கள் அனைவரும் ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் நடைபெறும் உடல் நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பான மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)

ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)

சுங்கச்சாவடியில் டிரைவர், கண்டக்டர்களிடம் கையெழுத்து வாங்கி அரசு பஸ்களை அனுமதித்த ஊழியர்கள்
வெள்ளி 11, ஜூலை 2025 8:22:12 AM (IST)
