» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி கோயிலில் தொல்லியல் துறை மாணவர்கள் களப்பணி
வியாழன் 11, ஜூலை 2024 7:53:13 PM (IST)
தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் களப்பணி மேற்கொண்டனர்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தொல்லியல் துறையைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் வகுப்பு தொடக்கத்தின் ஒரு பகுதியான இன்று தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலுக்குக் களப்பணிக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இங்கு மாணவர்களுக்குக் கல்வெட்டு படித்தல் மற்றும் கோயில் கட்டிடக்கலை சிற்பக்கலை கோவில் புனரமைப்பு முறைகள் போன்றவை வகுப்பு எடுக்கப்பட்டது. இக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோயில் முழுவதும் பழமை மாறாமல் புனரமைப்பு நடைபெற்று வருகிறது. மாணவர்களுடன் உதவி பேராசிரியர் முருகன் மற்றும் மதிவாணன் துறைத் தலைவர் சுதாகர் மாணவ மாணவிகளுடன் இந்தக் கோயிலுக்குச் சென்றிருந்தனர்.
மாணவ மாணவர்களுக்குக் கோயில்பற்றிய அறிமுக வகுப்பு எடுத்தனர். மேலும் செயல் அலுவலர் முருகன் மற்றும் தென்காசி பகுதி மண்டல சதபதி பார்த்திபன் அவர்கள் பழங்கால கோயில் கட்டுமான முறைபற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். இதில் மாணவர்கள் அனைவரும் ஆர்வமுடன் பல கேள்விகள் கேட்டுப் பயனடைந்தனர்.