» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலம் மெயின் அருவியில் 10 நாட்களுக்கு பிறகு அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
திங்கள் 27, அக்டோபர் 2025 8:51:28 AM (IST)

குற்றாலம் மெயின் அருவியில் 10 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 16-ந் தேதி முதல் பரவலாக கனமழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மழைப்பொழிவு சற்று குறைந்ததால் அருவிகளுக்கு வரும் தண்ணீர் வரத்தும் குறைய தொடங்கியது. இதனால் ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. காட்டாற்று வெள்ளத்தினால் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி பகுதிகளில் தடுப்பு கம்பிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் நின்று குளிக்கும் தரைதள பகுதி உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்திருந்ததால் அங்கு மட்டும் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டது.
குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சி தலைவர் கணேஷ் தாமோதரன், செயல் அலுவலர் ஆகியோர் அருவிக்கரை பகுதியில் சேதமான பகுதிகளை பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர்.
அதனடிப்படையில் கடந்த 2 நாட்களாக குற்றாலம் மெயின் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் சிமெண்டு தரைதளம் புதிதாக அமைக்கும் பணிகளும், பாதுகாப்பிற்காக இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்றன.
மேலும் நடைபாதைகளில் சேதமடைந்து காணப்பட்ட தளச்செங்கல்களும் புதிதாக மாற்றப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாலும், மெயின் அருவியில் வெள்ளம் குறைந்ததாலும் 10 நாட்களுக்கு பிறகு நேற்று காலை முதல் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். மெயின் அருவி உள்பட மற்ற அருவிகளிலும் உற்சாகமாக குளித்தனர். பழைய குற்றாலம் அருவியில் மட்டும் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த பணி முடிந்த பின்பு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கக்கடலில் மோந்தா புயல்: நெல்லை, தென்காசிக்கு பலத்த மழை எச்சரிக்கை!
திங்கள் 27, அக்டோபர் 2025 11:19:35 AM (IST)

மக்காச்சோளத்தில் விஷம் வைத்து 50 மயில்கள் சாகடிப்பு : விவசாயி கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:52:16 PM (IST)

நெல்லை சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்: டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹடிமணி உத்தரவு
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:45:38 PM (IST)

வீட்டில் அத்துமீறி நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை : வன ஊழியர் கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:44:07 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 25, அக்டோபர் 2025 4:18:40 PM (IST)

நெல்லையில் பெண் பயணியை அவதூறாக பேசிய அரசு பஸ் டிரைவர் பணி இடைநீக்கம்
சனி 25, அக்டோபர் 2025 8:36:18 AM (IST)




