» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குடும்பத் தகராறில் கணவரை கல்லால் தாக்கி கொலை செய்த மனைவி கைது

சனி 13, ஜூலை 2024 8:52:46 PM (IST)

மானூர் அருகே குடும்பத் தகராறில் கணவரை கல்லால் தாக்கி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டத்தில் உள்ள தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தடியம்பட்டி, வடக்கு தெருவை சேர்ந்த சந்தானம் (44) என்பவருக்கும் பூமாரி (42) என்பவருக்கும் திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். 10.07.2024 அன்று அதிகாலை அளவில் சந்தானம் அவருடைய வீட்டிற்கு முன்பு ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். 

இதுகுறித்து மானூர் வட்ட காவல் ஆய்வாளர் சபாபதி  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சந்தானத்திற்கும் பூமாரிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.  இதன் காரணமாக பூமாரி சந்தானத்தை கல்லால் தாக்கி பலத்த ரத்த காயம் ஏற்படுத்தி கொலை செய்தது தெரியவந்தது. மேற்படி மானூர் வட்ட காவல் ஆய்வாளர் அவர்கள் பூமாதியை 13.07.2024 இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory