» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநங்கையின் உரிமைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்: நீதிபதிகள் பங்கேற்பு
சனி 27, ஜூலை 2024 11:13:53 AM (IST)

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் திருநங்கையின் உரிமைகள் மற்றும் கேலிவதை தடுப்புச் சட்டம் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
 திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் எம்.சாய்சரவணன் வழிகாட்டுதலின்படி தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி பி. ராஜவேல் தலைமையில் தென்காசி முதன்மை சார்பு நீதிபதி வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவர் ஜெ. கிறிஸ்டல் பபிதா முன்னிலையில் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் வைத்து திருநங்கையின் உரிமைகள் மற்றும் கேலிவதை தடுப்புச் சட்டம் 1997 பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
 திருநங்கைகளை கேலி செய்யக்கூடாது. அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். புதிய மூன்று வகையான சட்டங்களை ஆண் பெண் மற்றும் திருநங்கை என பாலின வகைப்பாடு குறிப்பிடப்பட்டு திருநங்கைகளுக்கும் சம உரிமை அளிக்கப் பட்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அவர்களுக்கு கல்வி கற்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அனைத்து துறைகளிலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என நீதிபதிகள் பேசினர். 
 முகாமில் தென்காசி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெ. ராஜேஷ்குமார், தென்காசி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி எம். பொன்பாண்டி, தென்காசி வட்ட சட்ட பணிகள் குழு வழக்கறிஞர்கள் வேல்பாண்டி, மரகதம், முத்துக்குமார், சசிகுமார்,ஜெபா, செல்வகுமார், சத்யா,ரஹ்மத் பாசானா, மாரி லட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, சகி ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி ஜெயராணி, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)

நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீஸ் விசாரணை
சனி 1, நவம்பர் 2025 8:06:24 AM (IST)




