» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு: 3வது நாளாக குளிக்க தடை!
செவ்வாய் 30, ஜூலை 2024 11:31:48 AM (IST)
குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருவதால் இன்று 3வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றால அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டாறு அணைக்கு மேலே உள்ள தனியார் அருவிகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.
மேலும், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை ஆகிய இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல நாளை (ஜூலை 31) முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.