» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாநகராட்சியில் திட்டப் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு!
திங்கள் 5, ஆகஸ்ட் 2024 10:27:25 AM (IST)

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர், மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப் , மாநகராட்சி ஆணையாளர் மரு.என்.ஒ.சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா , திருநெல்வேலி மாநகராட்சி மேயர் (பொ) கே.ஆர்.ராஜூ , முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் , முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் , ஆகியோர் முன்னிலையில் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மகாத்மா காந்தி மார்கெட் ரூ.40.03 கோடி மதிப்பில் 420 கடைகள், வாகன நிறுத்தும் இடம், போன்ற பல்வேறு சிறப்பு வசதிகளுடன் கூடிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டார்கள். இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள். தொடர்ந்து பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் ரூ.53.14 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம், வணிக வளாகம் 1,2 மற்றும் பலஅடுக்கு வாகன நிறுத்தும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
பாளை பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள பலஅடுக்கு வாகன நிறுத்தும் இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்பார்வையிட்டு வாகனங்கள் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகு சூழ்நிலை பொறுத்து வாகன காப்பகம் ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம். தொடர்ந்து பாளை பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் பொதுமக்களுக்கு பயன் உள்ள நூலகம் மற்றும் பொதுவான நிறுவனங்கள் அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என தெரிவித்தனர்.
மேலும் சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் அருகில் உள்ள வணிக நிறுவனங்களின் வாடகைகளுக்கு ஏற்ப நிர்ணயம் செய்து வாடகைக்கு விட நடவடிக்கைகள் எடுக்கவும் அரசுத்துறை சார்ந்த நிறுவனங்களின் பயன்பாட்டிற்கும் வழங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளர் (பொ) தங்கபாண்டியன், உதவி செயற்பொறியாளர்கள் செ.பேரின்பம் , உதவி ஆணையர் ஜான்சன் தேவசகாயம் , உதவி பொறியாளர் பிலிப் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)

நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீஸ் விசாரணை
சனி 1, நவம்பர் 2025 8:06:24 AM (IST)

மதுரை ரயில்வே கோட்டத்தை சென்னை தேர்வு வாரியத்துடன் இணைக்க வேண்டும்: முதல்வரிடம் கோரிக்கை!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:37:06 AM (IST)




