» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாநகராட்சியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை - பொதுமக்கள் கோரிக்கை!

திங்கள் 5, ஆகஸ்ட் 2024 10:53:25 AM (IST)

திருநெல்வேலி மாநகராட்சியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 43வது வார்டில் உள்ள BBC காலனி, TSMO நகர், குலவணிகர்புரம், வீரமாணிக்கபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 1500 வீடுகளுக்கு கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். தெற்கு புறவழிச்சாலை, ரிலையன்ஸ் பல்க் அருகில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதாக சொல்கிறார்கள். ஒரே நாளில் குடிநீர் உடைப்பை சரி செய்யலாம்.

அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்சினையை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார்கள். பொது மக்கள் புகார் அளித்தும் குடிநீர் பிரச்சினையை அதிகாரிகள் அலட்சியப்படுத்துகிறார்கள். கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் உடைப்பை சரி செய்யாமல் இருப்பதால் பொதுமக்கள் சாலை மறியல் செய்யும் மன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் விரைவாக நடவடிக்கை எடுத்து பொது மக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

39வது தேசிய கண் தானே இரு வார நிறைவு விழா

வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:57:40 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory