» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தடகள விளையாட்டுப் போட்டிகள்: ஆக்ஸ்போர்டு பள்ளி சாம்பியன்
திங்கள் 2, செப்டம்பர் 2024 8:07:33 PM (IST)

தென்காசியில் நடைபெற்ற குறுவட்ட தடகள விளையாட்டுப் போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.
தென்காசி ஐ.சி.ஐ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் தென்காசி குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
14 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் 100 மீ ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதலில் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் முகம்மது இலியாஸ் முதலிடமும், ஷமஸ் நவீன் இரண்டாமிடமும், மாணவர் பிரபாகர் 400 மீ, 600மீ ஓட்டங்களில் முதலிடமும், ஜெரேமியா 200 மீ ஓட்டத்தில் மூன்றாமிடமும், 400மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும், சக்தி சர்வேஸ் குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதலில் முதலிடமும், முகம்மது ஹசின் உயரம் தாண்டுதலில் முதலிடமும், 110மீ தடை தாண்டி ஓட்டத்தில் மூன்றாமிடமும் பெற்றனர்.
17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் இப்பள்ளி மாணவர் முகம்மது ஒவைஸ் முகைதீன் 100மீ, 200மீ ஓட்டத்தில் முதலிடமும், 4க்கு100மீ தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும், 4க்கு400மீ தொடர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், பிரசன்னா 3000 மீ ஓட்டம் மற்றும் 4க்கு400மீ தொடர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், மதன்ராஜ் குண்டு எறிதலில் இரண்டாமிடமும், ஆசிம் முஸ்தபா 400 மீ, 800மீ, 4க்கு100மீ தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும், 4க்கு400மீ தொடர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், நித்தீஸ் கிருஷ்ணன் 110மீ தடை தாண்டும் ஓட்டத்தில் மூன்றாமிடமும், விஸ்னுராஜ் கோலூன்றித் தாண்டுதலில் மூன்றாமிடமும், சுவீஸ் 400க்கு100மீ தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும், செய்யது இஸாஸ் 400க்கு100மீ தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும் பெற்றனர்.
19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் இப்பள்ளி மாணவர் முகம்மது அக்ஸின் 100மீ;, 200மீ, 400மீ ஓட்டங்கள்;, 4க்கு100மீ மற்றும் 4க்கு400மீ தொடர் ஓட்டங்களில் முதலிடமும், மதீஸ் 800மீ, 400மீ ஓட்டங்கள்;, தடை தாண்டும் ஓட்டம், ஈட்டி எறிதல், 4க்கு100மீ, 4க்கு400மீ தொடர் ஓட்டங்களில் முதலிடமும், சுபசக்திவேல் 200மீ, 400மீ ஓட்டங்களில் மூன்றாமிடமும், 4க்கு100மீ மற்றும் 4க்கு400மீ தொடர் ஓட்டங்களில் முதலிடமும், திவாகர் உயரம் தாண்டுதலில் இரண்டாமிடமும், கோலூன்றி தாண்டுதலில் மூன்றாமிடமும், புகழேந்தி 100மீ ஓட்டத்தில் மூன்றாமிடமும், நீளம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதலில் இரண்டாமிடமும், 4க்கு100மீ, 4க்கு400மீ தொடர் ஓட்டங்களில் முதலிடமும், கொம்பையா பாண்டியன் ஈட்டி எறிதலில் மூன்றாமிடமும், முகம்மது அஜ்மல் வட்டு எறிதலில் இரண்டாமிடமும் பெற்றனர்.
17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவி மாணிக்க ஸ்ரீ 800மீ, 1500மீ, 3000மீ ஓட்டங்களில் முதலிடமும், 4க்கு100மீ, 4க்கு400மீ தொடர் ஓட்டங்களில் மூன்றாமிடமும், கவ்யா உயரம் தாண்டுதலில் இரண்டாமிடமும், அமிர்தா 3000மீ ஓட்டத்தில் மூன்றாமிடமும், வர்சா, பிரியதர்சினி, அனுஸ்கா ஆகியோர் 4க்கு100மீ, 4க்கு400மீ தொடர் ஓட்டங்களில் மூன்றாமிடமும் பெற்றனர்.
19 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் இப்பள்ளி மாணவி கார்த்திகா 100மீ ஓட்டத்தில் முதலிடமும், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், 4க்கு100மீ தொடர் ஓட்டம் ஆகியவற்றில் இரண்டாமிடமும், செல்லின் செல்சினா குண்டு எறிதல், வட்டு எறிதலில் இரண்டாமிடமும், நிவேதிதா, நி~hலினி, மதுபாலா ஆகியோர் 4க்கு100மீ தெடாடர் ஓட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றனர்.
ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் முகம்மது இலியாஸ், முகம்மது அக்ஸின், மதீஸ், மாணவி மாணிக்க ஸ்ரீ ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றனர். மேலும் இப்பள்ளி மாணவர்கள் 139 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால் சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடக்கம்!
புதன் 5, நவம்பர் 2025 11:36:06 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:52:23 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)




