» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
முத்துநகர் கடற்கரை செல்பி பாயிண்ட்டில் எழுத்துக்களை சரி செய்ய கோரிக்கை!
புதன் 4, செப்டம்பர் 2024 8:35:39 AM (IST)

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் செல்பி பாயிண்ட்டில் எழுத்துக்களை சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட முத்துநகர் கடற்கரையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், கடற்கரையினை சுற்றி பார்க்கவும், பொழுது போக்காகவும் வந்து செல்கின்றனர். தூத்துக்குடியின் பல்வேறு பகுதியில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர்.
பூங்காவிற்கு வரும் மக்கள் தங்களை மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட்டில் செல்பி எடுத்துச் செல்கின்றனர். இந்த செல்பி பாயிண்ட்டில் உள்ள I Love Tuty எனும் எழுத்தில் T எனும் எழுத்து நீண்ட நாட்களாக இல்லாமல் இருந்து வருகின்றது. அதனை சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
IndianSep 4, 2024 - 07:59:29 PM | Posted IP 162.1*****
உண்மைதான. தற்போது தென்மேற்கு பருவக்காற்று வேகமாக வீசுவதால் கடல் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் உணவு பொருட்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தட்டு,தெர்மாகோல் பவுல் கடலில் கலந்து விடுகிறது. ஆதலால் கடலில் இருந்து குறிப்பிட்ட இடம் வரை கடை வைக்க அனுமதிக்க கூடாது.
முத்துSep 4, 2024 - 07:51:09 PM | Posted IP 162.1*****
முத்துநகர் கடற்கரையில் கண்காணிப்பு கேமிரா அமைக்க வேண்டும்.கடல் அருகில் நிறைய கடைகளை அமைத்து நிறைய பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் மிதக்கின்றன.ஆதலால் கடைகளை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும்.
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: தனியார் பள்ளி பஸ்கள் தீவைத்து எரிப்பு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:48:22 PM (IST)

அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு; அதிகாரிகள் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:11:40 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வெள்ளி 18, ஜூலை 2025 4:26:47 PM (IST)

சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் : நீதிபதி பங்கேற்பு
வெள்ளி 18, ஜூலை 2025 11:36:25 AM (IST)

திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : தெக்ஷண மாற நாடார் சங்கம்
வியாழன் 17, ஜூலை 2025 4:51:08 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது: சபாநாயகர் பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:41:27 PM (IST)

அந்தோணிசாமிSep 6, 2024 - 08:38:50 AM | Posted IP 162.1*****