» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு

புதன் 4, செப்டம்பர் 2024 3:52:22 PM (IST)



தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையினால் மருத்துவமனை வளாகத்திற்குள் மழை தண்ணீர் புகுந்து மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய அதிநவின உபகரண பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் பழுது அடைந்தது.

இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது கன மழையினால் பாதிப்பு அடைந்த மருத்துவமனை உபகரண பொருட்கள் அனைத்தும் புதுபித்து சரிசெய்யப்பட்ட நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கனமழையினால் பாதிப்பு அடைந்த பகுதிகள் மற்றும் சரிசெய்யப்பட்ட மருத்துவ உபகரணங்களை இன்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

மேலும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் நோயாளிகள் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் போதுமான அளவு உள்ளதா உள்ளிட்டவைகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மதுத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

வேடிக்கை பார்ப்பவன்Sep 4, 2024 - 06:14:25 PM | Posted IP 172.7*****

அங்கு சில டாக்டர்கள் கார், செவிலியர்கள் பைக் எல்லாம் ஆஸ்பத்திரிக் குள்ளே அடிக்கடி சுத்திட்டு இருக்கே அவர்கள் எல்லாம் வாகனம் நிறுத்த தனியாக பார்க்கிங் இடம் இல்லையா? பொதுமக்கள், நோயாளி செல்லும் வழியில் இடையூறாக இருக்கே, அதை கண்டுக்க மாட்டார்களா ??? கலெக்டர் சார் நீங்க மாறுவேடத்தில் சென்று ஆய்வு பண்ணுங்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

39வது தேசிய கண் தானே இரு வார நிறைவு விழா

வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:57:40 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory