» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பார்வையற்றவரை இறக்கிவிட்ட அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்

சனி 7, செப்டம்பர் 2024 5:26:33 PM (IST)

கடையம் அருகே அரசு பேருந்தில் இருந்து பார்வையற்றவரை இறக்கிவிட்ட விவகாரத்தில் கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொட்டல்புதூரைச் சேர்ந்தவர் கந்தசாமி (55). பார்வையற்ற மாற்றுத்திறனாளி. தற்போது இவர் பாவூர்சத்திரத்தில் வசித்து வருகிறார். ரேஷன் அட்டை பொட்டல்புதூரில் இருப்பதால் மாதம் தோறும் அங்கு சென்று அரிசி, சீனி வாங்கி வருவார். சம்பவத்தன்று வழக்கம் போல மனைவியுடன் பொட்டல்புதூர் சென்று ரேஷன் அரிசி 5 கிலோ, மற்றும் சீனி வாங்கினார்.

பின் இருவரும் அகஸ்தியர்பட்டியில் இருந்து பாவூர்சத்திரம் சென்ற அரசு பஸ்சில் பயணித்தனர். கண்டக்டர் பழனிசாமி, கந்தசாமிக்கு பார்வையற்றவருக்கான இலவச பயண சீட்டு வழங்கினார். மேலும் 5 கிலோ ரேஷன் அரிசிக்கு லக்கேஜ் வாங்க வேண்டும் என்றார். மேலும் அவதூறாக பேசியதுடன் மனைவியுடன் அவரை திருமலையப்பபுரம் -- முதலியார்பட்டி ரோட்டில் நடுவழியில் இறக்கி விட்டார்.

இதுகுறித்து புகாரின்படி போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். பஸ் டிரைவர் தற்காலிகமானவர் என்பதால் அவரை பணி நீக்கம் செய்தனர். கண்டக்டர் பழனிசாமியை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory