» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் போதை மாத்திரை விற்பனை: 3 இளைஞர்கள் கைது
திங்கள் 7, அக்டோபர் 2024 10:43:04 AM (IST)
நெல்லையில் போதை மாத்திரை விற்பனை செய்ததாக 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 85 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி நகரம் பகுதியில் சந்தேக நபர்கள் 3 பேர் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருநெல்வேலி உதவி ஆணையர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், அங்கு விரைந்து சென்று அந்த 3 இளைஞர்களையும் மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடம் இருந்த பையை போலீசார் சோதனை செய்ததில், 85 போதை மாத்திரைகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார், அவர்கள் மூவரையும் திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், திருநெல்வேலி நகரத்தை சேர்ந்த சூர்யா (18), மணிகண்டன்(18), மதன் (18) ஆகியோர் என தெரியவந்தது. அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)

ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)

சுங்கச்சாவடியில் டிரைவர், கண்டக்டர்களிடம் கையெழுத்து வாங்கி அரசு பஸ்களை அனுமதித்த ஊழியர்கள்
வெள்ளி 11, ஜூலை 2025 8:22:12 AM (IST)
