» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசியில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி : உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு
திங்கள் 7, அக்டோபர் 2024 10:48:27 AM (IST)

நெல்லை, தென்காசியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நேற்று ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர் எஸ் எஸ்) சார்பில் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. தென்காசியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி தென்காசி யானை பாலம் பகுதியில் இருந்து துவங்கியது. அப்போது காவி கொடிக்கு புஷ்பாஞ்சலி செய்யப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பேரணி தென்காசி-திருநெல்வேலி சாலையில் சென்று வாய்க்கால் பாலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தை சென்றடைந்தது.
இந்தப் பேரணியில் 300க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் சீருடையில் கலந்து கொண்டு நடந்து சென்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பேரணி நடைபெற்ற வழிகளில் பொதுமக்கள் ஆர் எஸ் எஸ் தொண்டர்களுக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர். அணிவகுப்பு ஊர்வலத்தை முன்னிட்டு சாலை முழுவதும் போலீசார் அரண் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நெல்லையில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு
ஆர்எஸ்எஸ் நிறுவன தினத்தை முன்னிட்டு, அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம், திருநெல்வேலி தச்சநல்லூரில் நடைபெற்றது. இதையொட்டி, தச்சநல்லூர் சிவன் கோயில் முன் காவிக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பெண்கள் காவிக்கொடிக்கு தீபம் காட்டி, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
யுனஎநசவளைநஅநவெ2
திருநெல்வேலி சின்மயா மடத்தின் பிரம்மச்சாரிணி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை தொடக்கி வைத்தார். அணிவகுப்பு சிவன் கோயில் முன் தொடங்கி, தச்சநல்லூர் பெருமாள் கோயில், சந்திமறித்தம்மன் கோயில், வடக்கு புறவழிச் சாலை வழியாக வந்து வரம்தரும் பெருமாள் கோயில் முன் நிறைவடைந்தது. அணிவகுப்பில் 300க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

தென்காசி வக்கீல் கொலையில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:20:02 AM (IST)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)

மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 11, டிசம்பர் 2025 8:27:54 AM (IST)


