» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
உரிமம் இன்றி விடுதிகள் நடத்தினால் 2 ஆண்டு சிறை : ஆட்சியர் எச்சரிக்கை
திங்கள் 7, அக்டோபர் 2024 5:53:22 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் உரிமம் இன்றி விடுதிகள் நடத்தினால் 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று ஆட்சியர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதிகளை தமிழ்நாடு மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டம் – 2014-ன் கீழ் பதிவு செய்து உரிய அனுமதி பெறுவதற்கு இணையதளம் மூலமாக https://tnswp.com (Tamilnadu Single Window Portal) மூலம் உரிய ஆவணங்களுடன் 31.10.2024-க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. தவறும்பட்சத்தில் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு குழந்தைகள் மற்றும் மகளிர் விடுதிகள் சட்டத்தின்படி ரூ.50ஆயிரம் மட்டும் அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மணிமுத்தாறு வளாக முதல் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
திருநெல்வேலி -09
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)

நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீஸ் விசாரணை
சனி 1, நவம்பர் 2025 8:06:24 AM (IST)

மதுரை ரயில்வே கோட்டத்தை சென்னை தேர்வு வாரியத்துடன் இணைக்க வேண்டும்: முதல்வரிடம் கோரிக்கை!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:37:06 AM (IST)




