» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திறந்தவெளியில் சிறுநீர் , மலம் கழித்தால் அபராதம்: பேரூராட்சி நிர்வாகம் உத்தரவு
திங்கள் 28, அக்டோபர் 2024 12:15:20 PM (IST)
நெல்லையில் உள்ள பேரூராட்சிகளில் திறந்தவெளியில் சிறுநீர் கழித்தால் ரூ.100, மலம் கழித்தால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 17 பேரூராட்சிகள் உள்ள நிலையில் வடக்கு வள்ளியூர் மற்றும் திசையன் விளை பேரூராட்சிகளில் முதல்கட்டமாக அமலுக்கு வருகிறது. இதுகுறித்து மேலும் வெளியான அறிக்கையில்; திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வள்ளியூர் சிறப்புநிலைப் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் பொதுமக்கள் திறந்தவெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தக் கூடாது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திறந்தவெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு பல்வேறு தொற்று நோய்கள் பால வாய்ப்புள்ளது. அதனால் பொதுமக்கள் பொது கழிப்பிடத்தையோ அல்லது தனிநபர் கழிப்பிடத்தையோ பயன்படுத்தவேண்டும்.
இதனை பயன்படுத்தாமல் திறந்தவெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தினால் சிறுநீர் கழித்தால் ரூ.100ம், மலம் கழித்தால் ரூ.500ம் அபராதம் விதிக்கப்படுவதுடன் உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். தற்போது ஒவ்வொரு வார்டும் கண்காணிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இதன் மூலம் அன்புடன் தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
புதன் 17, செப்டம்பர் 2025 10:31:00 AM (IST)

கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 8:33:36 AM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)
