» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி - தாம்பரம் தீபாவளி சிறப்பு ரயில் : முன்பதிவு தொடங்கியது!
செவ்வாய் 29, அக்டோபர் 2024 8:18:59 AM (IST)
தீபாவளியை முன்னிட்டு, தூத்துக்குடி-தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடியில் இருந்து அக்.29 , நவ.4-இல் இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06188) மறுநாள் காலை 10.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரத்தில் இருந்து அக்.30, நவ.5- ஆகிய தேதிகளில் பகல் 12.20 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 11.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். இதில் 3 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 9 பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில், தூத்துக்குடி மேலூா், கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும். இந்த நிலையில், தூத்துக்குடி-தாம்பரம் தீபாவளி சிறப்பு ரயில்கள் முன்பதிவு துவங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட பயணிகளின் கோரிக்கைகளை ஏற்று இச்சிறப்பு ரயில்களை இயக்கிய தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் சங்கத்தின் செயலாளர்
மா. பிரமநாயகம் நன்றி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
ஹென்றிOct 29, 2024 - 09:25:50 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடி முதல் சென்னை வரை நிரந்தரமாக முத்து நகர் விரைவு ரயில் இல்லாமல் கூடுதல் ஒரு ரயில் கண்டிப்பாக தேவை
மேலும் தொடரும் செய்திகள்

கொடுமுடியாறு அணையில் நவ.10ம் முதல் தண்ணீர் திறப்பு : தமிழக அரசு ஆணை!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:53:55 PM (IST)

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வில் வினாத்தாள் மாறியதால் பரபரப்பு
வெள்ளி 7, நவம்பர் 2025 8:44:49 AM (IST)

குடும்பத் தகராறில் சரமாரியாக வெட்டிய வாலிபர் : மாமியார் உயிரிழப்பு, மனைவி படுகாயம்!
வெள்ளி 7, நவம்பர் 2025 8:30:36 AM (IST)

தாமிரபரணி கரையில் பனை விதைகள் விதைக்கும் விழா: சபநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார்!
வியாழன் 6, நவம்பர் 2025 5:16:48 PM (IST)

நெல்லையில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்: தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!
வியாழன் 6, நவம்பர் 2025 4:06:52 PM (IST)

பழிவாங்க நினைத்திருந்தால் விஜய் சிறையில் இருந்திருப்பார்: சபாநாயகர் அப்பாவு பேட்டி
வியாழன் 6, நவம்பர் 2025 3:50:26 PM (IST)





RajanOct 30, 2024 - 05:56:03 AM | Posted IP 172.7*****