» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வல்லநாடு ஆற்றுப்பாலத்தில் மீண்டும் சேதம்: வாகன ஓட்டிகள் அச்சம்!
புதன் 30, அக்டோபர் 2024 5:49:28 PM (IST)

வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் மீண்டும் சேதம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
 தூத்துக்குடியில் இருந்து நெல்லை வரை நான்கு வழிச்சாலை திட்டம் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நான்கு வழிச்சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனென்றால் தூத்துக்குடியில் உள்ள துறைமுகங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள், பெரிய கம்பெனிகளுக்கு செல்லும் வாகனங்கள், விமான நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள் என தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக தான் சென்று வருகின்றன. 
 தூத்துக்குடி-நெல்லை நான்கு வழிச்சாலையில் வல்லநாடு தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மிக பிரமாண்டமான பாலம் ஒன்று கட்டப்பட்டது. ஆரம்பம் முதலே பாலம் முறையாக கட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்த நிலையில், பாலத்தில் பல முறை விரிசல்கள் ஏற்பட்டு சேதம் அடைந்து பராமரிப்பு பணிகள் நடந்துள்ளது.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலத்தை சீரமைக்க சுமார் ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வந்தது. 
 முதற்கட்டமாக பாலத்தின் மேல் முழுமையாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. பாலத்தில் போக்குவரத்து தொடங்கப்பட்ட 6 மாத காலம் கூட ஆகாத நிலையில் தூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் சாலையில் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் நடுவே கனரக வாகனங்கள் சென்றபோது மீண்டும் சேதமடைந்தது. பாலத்தில் நடுவில் ராட்சத பள்ளம் ஏற்பட்டு கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளது.
 இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சேதமடைந்த இடத்தை தடுப்பு வேலிகள் வைத்து அடைத்து வைத்துள்ளனர். ஏற்கனவே பலமுறை இந்த பாலம் சேதமடைந்த நிலையில் தற்போது மீண்டும் ராட்சத பள்ளம் ஏற்பட்டு கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிக்கின்றனர். எனவே உயர்மட்ட பாலத்தை முறையாக சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)

நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீஸ் விசாரணை
சனி 1, நவம்பர் 2025 8:06:24 AM (IST)





BalaOct 31, 2024 - 07:24:54 AM | Posted IP 172.7*****