» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பழங்குடியினர் மக்கள் வார விழா: சார் ஆட்சியர் அர்பித் ஜெயின் தொடங்கி வைத்தார்

சனி 16, நவம்பர் 2024 11:10:56 AM (IST)



காரையார் உண்டு உறைவிட பள்ளியில் பழங்குடியினர் மக்கள் வார விழாவினை சேரன்மாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின் தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் விக்கிரமசிங்கபுரம் காரையார் அகஸ்தியர் காலனியில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் நடைபெற்ற பழங்குடியினர் மக்கள் வார விழாவினை சேரன்மாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் எம்.இளையராஜா, முன்னிலையில் தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

காரையார் அகஸ்தியர் காலையில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் ஆதிராவிட மற்றும் பழங்குடியிளர் நலத்துறையின் சார்பில் நவ.15 முதல் வருகின்ற 22 வரை ஏழு நாட்கள் பழங்குடியின மக்கள் வார விழா கொண்டாடபட உள்ளது. இந்த விழாவின் தொடக்க நாளான இன்று பழங்குடியின மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் காய்ச்சல், கண் பரிசோதனை, உயர் இரத்த அழுத்த பரிசோதனை, போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து 22.11.2024 வரை ஒவ்வொரு நாளும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ப.அன்பழகன்,  அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் காஜா கரிபுன் நவாஸ், மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தென்காசியில் பொதிகை புத்தக திருவிழா

திங்கள் 18, நவம்பர் 2024 5:03:10 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory