» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 4 பேரிடர் மீட்பு படை குழுக்கள்: தயார் நிலையில் இருக்க எஸ்பி உத்தரவு!

புதன் 20, நவம்பர் 2024 3:20:40 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், 4 பேரிடர் மீட்பு படை குழுக்கள் எந்நேரமும் தயார் நிலையில் இருக்குமாறு எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார். 

வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்காங்கே கனமழை பெய்து வருவதை முன்னிட்டு ஆபத்துக் காலங்களில் அவசர உதவிக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்   மாவட்ட காவல்துறையில் 4 பேரிடர் மீட்பு படை குழுக்கள் உருவாக்கப்பட்டு மீட்பு உபகரணங்களுடன் எந்நேரமும் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  இன்று (20.11.2024) ஆயுதப்படை  வளாகத்தில்,  மேற்படி தூத்துக்குடி மாவட்ட  காவல்துறை பேரிடர் மீட்பு படையினர் மற்றும்  பயன்படுத்தும் உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மேற்படி பேரிடர் மீட்பு படையினர் வெள்ள நேரங்களில் துரிதமாக செயல்பட்டு பேரிடர் காலத்தில் வெள்ளத்தில் சிக்கும் பொதுமக்களை மீட்பது குறித்தும், மீட்பு படையினர் எந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.


மக்கள் கருத்து

FYINov 20, 2024 - 11:52:51 PM | Posted IP 172.7*****

Tn69

AlwarappamNov 20, 2024 - 09:30:01 PM | Posted IP 172.7*****

Always boiling water.first aid box.awareness of health educagion ettc wtv

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தென்காசியில் பொதிகை புத்தக திருவிழா

திங்கள் 18, நவம்பர் 2024 5:03:10 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory