» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் என்சிசி மாணவிகள் தூய்மைப் பணி!
செவ்வாய் 26, நவம்பர் 2024 4:27:20 PM (IST)
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் புனீத் சாகர் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக 5 கல்வி நிறுவனங்களைச் சார்ந்த 382 தேசிய மாணவர் படை மாணவிகள் கடலோர தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் தூய மரியன்னை கல்லூரி, ஏபிசி மகாலட்சுமி கல்லூரி, ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, தூய அலாய்சியஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படை மாணவிகள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
இதை என்சிசி அதிகாரிகள் மேரி பிரியா, முத்துக்கனி, லொலிடா ஜூட், கிறிஸ்டினா ரேகா மற்றும் அல்பினா மேரி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். சைக்கிள் பேரணியை ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை செலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். நடைப் பயணத்தை புனித அலாய்சியஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஆன்டணி சகா வசந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அனைத்து தேசிய மாணவர்கள் படை மாணவர்களையும் புனித மரியன்னை கல்லூரி முதல்வர் ஜெஸ்ஸி பெர்னாண்டோ வரவேற்று விழாவை தொடங்கி வைத்தார். இதில் சைபர் கிரைம் துறையைச் சார்ந்த தலைமை காவல் அதிகாரி சோமசுந்தர், அர்ச்சுதன், ஐரின் மற்றும் சமூக நலத்துறையின் அதிகாரி செலின் சமூக மற்றும் இணையதள பாதுகாப்பு பற்றி உரையாற்றினர்.
SRINIVASANNov 27, 2024 - 12:07:30 PM | Posted IP 172.7*****