» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் இளையோர் திருவிழா போட்டிகள் : நேரு யுவ கேந்திரா அலுவலர் தகவல்!
வியாழன் 28, நவம்பர் 2024 4:50:50 PM (IST)
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் மாபெரும் மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா டிச.4ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக நேரு யுவ கேந்திரா அலுவலர் ஞான சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திருநெல்வேலி மாவட்ட நேரு யுவ கேந்திரா நடத்தும் மாபெரும் மாவட்ட அளவிலான இளையோர் திருவிழாவானது 04.12.2024 திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் வைத்து நடைபெறுகிறது.
நேரு யுவ கேந்திரா ஆண்டுதோறும் இளைஞர்களின் ஆற்றல்மிகு திறன்களை வெளிக் கொண்டுவரும் விதமாக இளையோர் திருவிழாவை நடத்தி வருகிறது. அவ்வண்ணமே இந்த ஆண்டும் வெகு சிறப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த விழாவானது நடைபெற உள்ளது.
இப்போட்டிகள் மாவட்ட அளவில் தொடங்கி தேசிய அளவில் நிறைவடையும் இந்த பொன்னான வாய்ப்பை நமது திருநெல்வேலி மாவட்ட இளைஞர்களும், மாணவ மாணவிகளும் பயன்படுத்திக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நடைபெறும் போட்டிகள் 1 அறிவியல் விழா கண்காட்சி தனி நபர் போட்டி (1ம் பரிசு ரூ.3000, 2ம் பரிசு ரூ.2000, 3ம் பரிசு ரூ.1500), 2 அறிவியல் விழா கண்காட்சி குழுப் போட்டி (1ம் பரிசு ரூ.7000, 2ம் பரிசு ரூ.5000, 3ம் பரிசு ரூ.3000), 3, இளம் எழுத்தாளர் போட்டி -கவிதை 4.இளம் கலைஞர் போட்டி ஓவியம், 5. கைப்பேசி புகைப்பட போட்டி (வரிசை எண் 3 முதல் 5 வரை உள்ள போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.2,500. 2ம் பரிசு ரூ.1500, 3ம் பரிசு 1000),
6. பிரகடன பேச்சுப் போட்டி (முதல் பரிசு ரூ 5000, 2ம் பரிசு ரூ 2500, 3ம் பரிசு 1500). 7. கலைத்திருவிழா குழு நடனப்போட்டி (முதல் பரிசு ரூ.7000, 2ம் பரிசு ரூ 5000, 3ம் பரிசு ரூ 3000) தகுதிகள் வயது வரம்பு 15 முதல் 29 வரை (01.09.2024-க்குள்), போட்டியில் பங்கு பெறுபவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். இந்த கலைப்போட்டிகளின் தலைப்பு கீழ்கண்ட ஐந்து தலைப்புகளில் இருக்க வேண்டும்.
1) வளர்ந்த இந்தியாவின் தீர்மானம்
2) காலனித்துவ மனநிலையின் எந்த தடயத்தையும் நீக்குதல்
3) எங்கள் மரபு மீது பெருமிதம் கொள்வது
4) நமது ஒற்றுமை பலம்
5) குடிமக்களின் கடமைகளை நேர்மையுடன் நிறைவேற்றுதல்.
மேற்கண்ட போட்டிகள் தமிழிலில் அல்லது ஆங்கிலத்தில் இருத்தல் வேண்டும். கலைப் போட்டிகளுக்கு மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதியுடையவர். முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும். மாவட்ட அளவிலான முன்பதிவிற்கு [email protected] என்ற இமெயில் முகவரியில் 02.12.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் முன்பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
போட்டி நடைபெறும் நாள் அன்று போட்டியாளர்கள் முன்பதிவு செய்யப்பட்ட விபரத்துடன், தங்களுடைய ஆதார். பிறப்பு சான்றிதழ், பள்ளி/கல்லூரியை சார்ந்தவர்கள் பிறந்த தேதி குறிப்பிடப்பட்ட உறுதி சான்றிதழ் (Bonafide Certificate) பள்ளி தலைமை ஆசிரியர்/ கல்லூரி முதல்வர்களிடம் பெற்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் தகவலுக்கு நேரு யுவ கேந்திரா, டிரைவர்ஸ் காலனி, EPF ஆபிஸ் ரோடு, என்.ஜி.ஓ ஏ காலனி, திருநெல்வேலி என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0462-2552803, 9489119313, 9489462140 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
ANTON Tim priyanNov 30, 2024 - 12:19:56 PM | Posted IP 172.7*****
Poem writing Tamil St. Xavier's College. Tirunelveli
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை பணிகளின் தரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!!
சனி 20, டிசம்பர் 2025 9:20:36 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)

தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 5:32:20 PM (IST)

ஆட்சிமொழிச் சட்டவாரம் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
புதன் 17, டிசம்பர் 2025 4:46:23 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை : சங்கரன் கோவிலில் பள்ளிகளுக்கு விடுமுறை!
புதன் 17, டிசம்பர் 2025 12:26:29 PM (IST)

ரவுடியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை : 2 மகள்களுக்கும் தீவிர சிகிச்சை!!
புதன் 17, டிசம்பர் 2025 11:54:59 AM (IST)


ANTON Tim priyanDec 1, 2024 - 06:55:08 PM | Posted IP 162.1*****