» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பள்ளிப் பேருந்து வயலுக்குள் பாய்ந்து விபத்து: மாணவ, மாணவிகள் உயிர் தப்பினர்
வியாழன் 9, ஜனவரி 2025 7:55:56 AM (IST)
குரும்பூர் அருகே பள்ளிப் பேருந்து வயலுக்குள் பாய்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் பயணித்த 40 மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள பணிக்கநாடார்குடியிருப்பு பகுதியில் தனியார் பள்ளி செயல்படுகிறது. நேற்று மாலையில் பள்ளி முடிந்தவுடன், 40 மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளிப் பேருந்து ஏரலை நோக்கி சென்று கொண்டிருந்தது. குரும்பூர் அடுத்துள்ள பாலத்தில் சென்றபோது, எதிரே வந்த தனியார் கல்லூரி பஸ் மீது மோதாமல் இருப்பதற்காக, டிரைவர் பள்ளிப் பேருந்தை பக்கவாட்டில் திருப்பி உள்ளார்.
இதில் நிலைதடுமாறிய அந்த பஸ் அருகிலுள்ள வயலுக்குள் பாய்ந்து விபத்துக்கு உள்ளானது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ, மாணவிகள் கூச்சலிட்டனர். உடனடியாக அந்த வழியாக சென்றவர்களும், அக்கம் பக்கத்தினரும் ஓடிசென்று பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக மீட்டனர்.
இதில், பஸ்சில் இருந்த 40 மாணவ, மாணவிகளும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். தகவல் அறிந்த மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள், குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி அருகே கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ: அரிய வகை மரங்கள் சாம்பல்- வனவிலங்குகள் பாதிப்பு?
திங்கள் 30, மார்ச் 2026 9:41:38 AM (IST)

நாங்குநேரி அ.ம.மு.க. வேட்பாளர் ஆர். இசக்கிமுத்து: எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:30:36 AM (IST)

பாபநாசம் வனப்பகுதியில் பெண் சிறுத்தை மர்ம சாவு : வனத்துறையினர் விசாரணை!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:58:59 AM (IST)

வேட்பு மனு தாக்கலின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் : ஆட்சியர் அறிவிப்பு
சனி 28, மார்ச் 2026 5:55:12 PM (IST)

மாணவிக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை: நெல்லை அருகே சிக்கிய பேராசிரியர்
சனி 28, மார்ச் 2026 11:41:58 AM (IST)

புதுப்பொலிவு பெறும் பழைய குற்றால அருவி : விரைவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
சனி 28, மார்ச் 2026 10:26:53 AM (IST)


கேள்விJan 9, 2025 - 08:41:13 AM | Posted IP 162.1*****