» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாபநாசம் வனப்பகுதியில் பெண் சிறுத்தை மர்ம சாவு : வனத்துறையினர் விசாரணை!

ஞாயிறு 29, மார்ச் 2026 9:58:59 AM (IST)



பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள லோயர் கேம்ப் பகுதியில், பெண் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது வனத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாபநாசம் வனப்பகுதியில் புலி, யானை, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், நேற்று வனத்துறையினர் லோயர் கேம்ப் பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பெரிய பாறையின் மீது சிறுத்தை ஒன்று அசைவற்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வன கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முதற்கட்ட ஆய்வில், இறந்து கிடந்தது சுமார் 1½ வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை என்பது உறுதி செய்யப்பட்டது.

சிறுத்தையின் உடல் அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் விதிமுறைப்படி தீயிட்டு எரிக்கப்பட்டது. சிறுத்தையின் மரணம் குறித்து வனத்துறையினர் கூறுகையில்: "இந்தச் சிறுத்தை பாறையில் இருந்து தாவும்போது வழுக்கி விழுந்து இறந்ததா? அல்லது மற்ற வனவிலங்குகளுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்." பாபநாசம் வனப்பகுதியில் சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory