» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு சாகும் வரை சிறை தண்டனை!

வெள்ளி 27, மார்ச் 2026 12:29:29 PM (IST)

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு, சாகும் வரை சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணகுமார் (45) என்பவர், 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அப்போதைய காவல் ஆய்வாளர் அன்னபூரணி இந்த வழக்கை விசாரணை செய்து, குற்றவாளியைக் கைது செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி லட்சுமணகுமாருக்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கை விரைவாகவும், திறம்படவும் கையாண்ட அதிகாரிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரசண்ணகுமார் பாராட்டியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்கக் காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் பயனாக, இந்த 2026-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 6 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. 

இதில் 1 குற்றவாளிக்கு மரண தண்டனை, 1 குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை, 1 குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, 1 குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சமரசம் இன்றி, குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory