» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் ஜன.15 முதல் 16 பெட்டிகளுடன் இயக்கம்!
வெள்ளி 10, ஜனவரி 2025 11:42:11 AM (IST)
நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் வருகிற 15-ம்தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை - சென்னை - நெல்லை இடையே 8 பெட்டிகளுடன் 'வந்தே பாரத்' ரயில்கள் (20666/20665) இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டுமென்று பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து வருகிற 11-ம் தேதி முதல் நெல்லை - சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்களில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு, 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் நெல்லை - சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்களில் பெட்டிகளை அதிகரிக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி இரு மார்க்கங்களிலும் வருகிற 15-ம்தேதி முதல் 16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கங்கைகொண்டான் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு
புதன் 24, ஜூன் 2026 8:31:52 PM (IST)

கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்து: நெல்லை மாவட்ட வாலிபர்கள் 3 பேர் பரிதாப பலி!
புதன் 24, ஜூன் 2026 7:31:35 AM (IST)

காவல் நிலையம் முன்பு தச்சுத் தொழிலாளி தீக்குளிப்பு: நெல்லை அருகே பரபரப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:42:13 AM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் : டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
சனி 20, ஜூன் 2026 5:19:42 PM (IST)

குற்றாலத்தில் குளுகுளு சீசன் களைகட்டியது : ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்!
சனி 20, ஜூன் 2026 3:26:04 PM (IST)

அரசுக்கு ரூ.1.92 கோடி வருவாய் இழப்பு: முன்னாள் பேரூராட்சித் தலைவருக்கு 3 ஆண்டு சிறை!
சனி 20, ஜூன் 2026 11:31:55 AM (IST)


