» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் காவலர்களை நியமிக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை !

வெள்ளி 10, ஜனவரி 2025 5:52:29 PM (IST)



தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல்  நிலையத்தில் காவலர்களை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையத்தில் நிரந்தரமாக போலீசார் இல்லாததால் அடிக்கடி பல்வேறு அடிதடிகள் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் வாலிபர் ஒருவரை 5க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் மத்தியபாகம் காவலர் ஒருவர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். 

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையமாக இருந்தபோது புறக்காவல் நிலையத்தில் 5க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் இருந்தனர். தற்போது ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையமாக விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் பல ஆண்டுகளாகியும் போதிய அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. 

இதனால் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவதாக  பொதுமக்கள், பயணிகள் கூறுகின்றனர். எனவே பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் பாதுகாப்பு கருதி புறக்காவல் நிலையத்தில் போதுமான அளவு காவலர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.,க்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

RajaJan 10, 2025 - 06:01:08 PM | Posted IP 172.7*****

cc tv irukka? irunthal thukkungal antha naykalai

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory