» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகதில் பொங்கல் விழா போட்டிகள்: ஆட்சியர் பரிசு வழங்கினார்!
சனி 11, ஜனவரி 2025 10:13:36 AM (IST)

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், வழங்கினார். இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியாளர் மற்றும் பணியாளர்கள் நலவாரியத் தலைவர் விஜிலா சத்தியானந்த் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, கரும்பு, மஞ்சள் போன்ற தோரணங்கள் கட்டப்பட்டு தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுடன் 40க்கும் மேற்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து 13 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கோலப்போட்டி, ஒயிலாட்டம், பண் மற்றும் மூறுக்கு சாப்பிடும் போட்டி, கயிறு இழுத்தல், இளவட்டக்கல் தூக்குதல், உரி அடித்தல், மியூசிக்கள் சேர், லக்கி கார்ணர், ஸ்லோ சைக்கிள் ரேஸ், ஊசியில் நூல் கோர்த்தல், பலூன் உடைத்தல் போன்ற போட்டிகளில் அரசு துறை சார்ந்த ஆண் மற்றும் பெண் அலுவலர்களும், திருநங்கையர்களும் ஆர்வமுடன் பங்கேற்றார்கள்.
பொங்கல் சுவை மற்றும் பாரம்பரிய முறையில் சிறப்பாக பொங்கல் ஏற்பாடுகள் செய்த குழுக்களுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், வழங்கி பாராட்டினார். பெண் அலுவலர்கள் இளவட்டக்கல் தூக்கும் போட்டி, கயிறு இழுத்தல் போட்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்ற உரி அடித்தல் போட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்ற இளவட்டக்கல் தூக்குதல் போட்டி போன்ற போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பள்ளி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் வரவேற்பு நடனம், பொங்கல் பாடல்கள், வில்லு பாட்டு, கிராமிய நடனம், போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன், ஆகியோர் சமத்துவ பொங்கல் விழாவினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, தனி மாவட்ட வருவாய் அலுவலர் சிப்காட் ரேவதி, உதவி ஆட்சியர் பயிற்சி செல்வி அம்பிகா ஜெயின், திட்ட இயக்குநர்கள்; (மகளிர் திட்டம்) இலக்குவன், (ஊரக வளர்ச்சி முகமை) சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழு செயலாளர் விசாலி, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஈர்ப்பு வாகனம் 30ஆம் தேதி பொது ஏலம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:42:47 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

தென்காசி வக்கீல் கொலையில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:20:02 AM (IST)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)


