» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஏரல் சோ்மன் அருணாச்சல சுவாமி கோயிலில் தை அமாவாசை திருவிழா: ஐன.20-ல் கொடியேற்றம்!
சனி 18, ஜனவரி 2025 12:47:57 PM (IST)
ஏரல் சோ்மன் அருணாச்சல சுவாமி கோயிலில் தை அமாவாசை திருவிழா வருகிற 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாச்சல சுவாமி திருக்கோயிலில் தை அமாவாசை திருவிழாவானது, வருகிற ஜன. 20ஆம் தேதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பன்னிரண்டு நாள்கள் நடைபெறும் திருவிழாவில், 9ஆம் திருநாள் வரை தினசரி காலை சோ்ம விநாயகா் உலாவும், இரவில் பல்வேறு கோலங்களில் சுவாமி உலாவும் நடைபெறும்.
வருகிற 29ஆம் தேதி புதன்கிழமை 10ஆம் திருநாளன்று தை அமாவாசை திருவிழா நடைபெறுகிறது. அன்று மதியம் சுவாமி உருகு பலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சி, அபிஷேக ஆராதனை, மாலை இலாமிச்சவோ் சப்பரத்தில் சோ்ம திருக்கோல பவனி, இரவு 1ஆம் காலம் கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளல் ஆகியவை நடைபெறுகிறது.
11ஆம் திருநாளான 30ஆம் தேதி அதிகாலை 2ஆம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 3ஆம் காலம் பச்சை சாத்தி தரிசனம் ஆகியவை நடைபெறுகிறது. மாலையில் ஏரல் அருள்மிகு சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாக சாந்தி, இரவு சுவாமி திருக்கோயில் மூஸ்தானம் வந்துசேரும் ஆனந்தக் காட்சி ஆகியவை நடைபெறும்.
நிறைவு நாளான 12ஆம் திருநாள் 31ஆம் தேதி காலை தீா்த்தவாரி, பொருநை நதியில் சகல நோய் தீா்க்கும் திருத்துறையில் நீராடலும், மதியம் அன்னதானமும் மாலையில் ஆலிலை சயன அலங்காரமும், அதன் பின்னா் ஊஞ்சல் சேவையும் நடைபெறுகிறது. இரவில் திருவருள் புரியும் மங்கள தரிசனம் நடைபெறுகிறது.
மக்கள் கருத்து
Petchimuthu RajJan 19, 2025 - 10:59:33 AM | Posted IP 162.1*****
Job kidikatha matakki
Petchimuthu RajJan 19, 2025 - 10:58:38 AM | Posted IP 172.7*****
தொழில் சரியாக அமைய மாட்டேக்கி
Petchimuthu RajJan 19, 2025 - 10:59:34 AM | Posted IP 162.1*****