» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நடத்தை சந்தேகத்தில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர்: குழந்தைகள் கண் முன்னே பயங்கரம்!
ஞாயிறு 19, ஜனவரி 2025 10:43:58 AM (IST)
நெல்லை அருகே நடத்தை சந்தேகத்தில் மனைவியை கணவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை அருகே முன்னீர்பள்ளம் அடுத்துள்ள நயினார்குளம் களத்து மேட்டு தெருவை சேர்ந்தவர் பலவேசம் என்ற பலவேச பாண்டி (வயது 34), பெயிண்டர். இவரது மனைவி தமிழரசி (30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பலவேசம் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். அதாவது, தமிழரசி செல்போனில் பேசுவதை பார்த்து, நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் தமிழரசி கடந்த ஆண்டு கணவரை பிரிந்து நெல்லை அருகே கொண்டாநகரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அவர் அங்கிருந்தபடி நெல்லை டவுன் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலைக்கு சென்று வந்தார். பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன் பலவேசம் தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த தமிழரசியிடம் பேசி சமரசம் செய்து, நயினார்குளத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்று, குடும்பத்துடன் ெபாங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
நேற்று முன்தினம் இரவு பலவேசம் தன்னுடைய மனைவியிடம் நடத்தை சந்தேகம் குறித்து பேசி மீண்டும் தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து சமாதானம் அடைந்த பின்னர் அவர்கள் குழந்தைகளுடன் தூங்கினார்கள். நேற்று அதிகாலையில் கணவன்-மனைவி இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அவர்களின் சத்தம் கேட்டு குழந்தைகளும் கண்விழித்தனர். அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த பலவேசம், சமையல் அறையில் இருந்த அரிவாளை எடுத்து வந்து தமிழரசியை, குழந்தைகள் கண்முன்னே சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட பலவேசம் வீட்டில் இருந்து வெளியேறி முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழரசி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து பலவேசத்தை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைந்தமிழ் இலக்கியப் பேரவை ஆண்டு விழா!
சனி 8, நவம்பர் 2025 10:52:49 AM (IST)

வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
சனி 8, நவம்பர் 2025 8:47:30 AM (IST)

கொடுமுடியாறு அணையில் நவ.10ம் முதல் தண்ணீர் திறப்பு : தமிழக அரசு ஆணை!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:53:55 PM (IST)

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வில் வினாத்தாள் மாறியதால் பரபரப்பு
வெள்ளி 7, நவம்பர் 2025 8:44:49 AM (IST)

குடும்பத் தகராறில் சரமாரியாக வெட்டிய வாலிபர் : மாமியார் உயிரிழப்பு, மனைவி படுகாயம்!
வெள்ளி 7, நவம்பர் 2025 8:30:36 AM (IST)

தாமிரபரணி கரையில் பனை விதைகள் விதைக்கும் விழா: சபநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார்!
வியாழன் 6, நவம்பர் 2025 5:16:48 PM (IST)




