» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை அருகே வாலிபர் வெட்டிக் கொலை; மது போதையில் நண்பர் வெறிச்செயல்!!
வியாழன் 30, ஜனவரி 2025 3:27:45 PM (IST)
நெல்லை அருகே வாலிபரை வெட்டிக் கொலை செய்த அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை முக்கூடல் அருகே உள்ள இடைகால் மீனவர் காலனியை சேர்ந்தவர் பரமசிவன் மகன் முருகன்(30). இவருக்கு காயத்ரி என்ற மனைவி உள்ளார். முருகன் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் இவரை பாப்பாக்குடி போலீசார் ரவுடிகள் பட்டியலில் சேர்த்து கண்காணித்து வந்தனர்.
சமீப காலமாக இவர் பிரச்சினைகளில் ஈடுபடாமல் இருந்து வந்த நிலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். அங்கு தங்கியிருந்து வேலை பார்க்கும் அவர் 2 வாரங்களுக்கு ஒருமுறை ஊருக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அதேபோல் 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு அவர் வந்திருந்த நிலையில், அதே மீனவர் காலனியில் வசிக்கும் அவரது நண்பரான பாபு (42) என்பவரும் சொந்த ஊருக்கு வந்தார்.
அவர் செங்கோட்டையில் உள்ள ஒரு எஸ்டேட்டில் வேலை செய்து வருகிறார். நண்பர்களான அவர்கள் 2 பேரும் நேற்று இரவு ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பகுதியில் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். பின்னர் 2 பேரும் தங்களது வீடுகளுக்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள சிவன் கோவில் தெருவில் பாபுக்கு சொந்தமான ஆட்டை, முருகன் காலால் எட்டி உதைத்த தாக கூறப்படுகிறது.
இதனால் பாபு, கோவிலுக்கு பரிகாரத்திற்காக உள்ள ஆட்டை ஏன் எட்டி உதைத்தாய் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி, ஆத்திரம் அடைந்த பாபு, தனது வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து வந்து முருகனை சரமாரியாக வெட்டினார். இதில் முருகனின் தலையில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் பாபு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து பாப்பாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பாபுவை தேடி வந்த நிலையில் இன்று அதிகாலை அவரை கைது செய்தனர். இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

முத்தூர் ஊராட்சியில் புதிய தொழில் பேட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:25:13 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)
