» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையைச் சேர்ந்தவருக்கு துபாய் லாட்டரியில் ரூ.2¼ கோடி பரிசு!!

சனி 1, பிப்ரவரி 2025 5:27:21 PM (IST)



நெல்லையை சேர்ந்த முகம்மது ஆதம் என்பவருக்கு துபாய் லாட்டரியில் ரூ.2¼ கோடி பரிசு அடித்துள்ளது.

துபாயில் தனியார் நிறுவனம் சார்பில் நடந்த லாட்டரி குலுக்கலில் நெல்லையை சேர்ந்தவர் பீர் முகம்மது ஆதம் என்பவருக்கு ரூ.2¼ கோடி பரிசு அடித்துள்ளது. இவா் துபாயில் உள்ள பொதுத்துறை நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். 

தனக்கு லாட்டரியில் பரிசு விழுந்தது குறித்து பீர் முகம்ம்து ஆதம் கூறியதாவது: நான் கடந்த 2007-ம் ஆண்டு முதல் துபாயில் வேலை செய்து வருகிறேன். என்னுடைய மனைவியும் மகளும் சொந்த ஊரில் வசித்து வருகிறார்கள். துபாயில் 3 ஆண்டுகளாக நண்பர்களுடன் சேர்ந்து லாட்டரி வாங்கி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளில் முதல் முறையாக எங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.10 லட்சம் திர்ஹாம் பரிசுத்தொகை எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எனது நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து காசோலைகளை அளித்துள்ளேன்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory