» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசு பஸ் கண்டக்டரை கத்தரிக்கோலால் குத்திய சிறுவன்: தென்காசி அருகே பரபரப்பு
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 10:19:26 AM (IST)
தென்காசி அருகே தன்னை நடுவழியில் இறக்கிவிட்ட கண்டக்டர் என நினைத்து அரசு பஸ் கண்டக்டரை கத்தரிக்கோலால் குத்திய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் ஊரில் இருந்து தென்காசி ரயில் நிலையத்திற்கு சென்றார். ஆனால் தாமதமாக சென்றதால், ரயில் புறப்பட்டு சென்றுவிட்டது. இதனால் வீட்டிற்கு செல்ல முடிவு செய்து தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம், ஆலங்குளம் வழியாக நெல்லைக்கு செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். அப்போது, அவர் மது அருந்தி இருந்ததாகவும், பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து, கண்டக்டரிடம் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே அந்த பஸ் கண்டக்டர், சிறுவனை பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே நடுவழியில் இறக்கிவிட்டு சென்றார் இதனால் விரக்தி அடைந்த அந்த சிறுவன் பஸ் நிலையத்திற்கு வந்தார். இந்த பஸ் எப்படியும் திரும்பி இதே வழியாகத்தான் வர வேண்டும் என்று கருதி காத்துக் கொண்டு இருந்தார்.
சில மணி நேரங்களில் பாபநாசத்தில் இருந்து சங்கரன்கோவிலுக்கு இயக்கப்படும் அரசு பஸ் பாவூர்சத்திரம் பஸ் நிலையம் வந்தது. அதில் கண்டக்டராக அம்பையைச் சேர்ந்த மாடசாமி (50) என்பவர் கீழே இறங்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு இருந்தார். அப்போது, நம்மை கீழே இறக்கி விட்ட கண்டக்டரும், பஸ்சும் தான் நிற்கிறது என நினைத்து அந்த சிறுவன், கண்டக்டரிடம் தகராறு செய்தார்.
அப்போது, அந்த சிறுவன் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தரிக்கோலால் மாடசாமியின் கழுத்தில் குத்த முயன்றார். சுதாரித்துக் கொண்ட அவர் தடுக்க முயன்ற போது, அவரது காதில் கத்தரிக்கோல் குத்து விழுந்தது. தசை கிழிந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அந்த சிறுவனை பிடித்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வந்து சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அதில் தன்னை நடுவழியில் இறக்கிவிட்ட கண்டக்டர் என நினைத்து மாடசாமியை தாக்கியதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். தொடர்ந்து நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகளவில் 7 நாடுகளில் தமிழ்மொழி ஆட்சிமொழியாக உள்ளது: சபாநாயகர் மு.அப்பாவு பேச்சு
புதன் 19, பிப்ரவரி 2025 4:45:45 PM (IST)

தீவிபத்து எதிரொலி : அனுமதியின்றி இயங்கிய தீப்பெட்டி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு
புதன் 19, பிப்ரவரி 2025 12:02:42 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் மினிபஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:05:57 PM (IST)

பாளையங்கோட்டையில் பொருநை அருங்காட்சியகம் பணிகள் : அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:44:21 PM (IST)

மும்மொழி கல்விக்கொள்கைக்கு எதிராக போராட்டம் : இந்திய மாணவர் சங்கத்தினர் கைது
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:41:15 AM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் சுகுமார் வழங்கினார்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 4:34:12 PM (IST)
