» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்டத்தின் 224-வது மாவட்ட ஆட்சித் தலைவராக இரா.சுகுமார் பொறுப்பேற்பு!
சனி 8, பிப்ரவரி 2025 12:54:06 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தின் 224-வது மாவட்ட ஆட்சித் தலைவராக மருத்துவர் இரா.சுகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 224-வது மாவட்ட ஆட்சித் தலைவராக இரா.சுகுமார், பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தொன்மை, வரலாறு, வீரம், கலை இலக்கியம் என்று பல்வேறு நிலைகளில் தனித்துவத்துடன் சிறந்து விளங்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சித் தலைவராக பணியாற்ற வாய்ப்பு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு முதற்கண் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள். அதில் குறிப்பாக, பொதுமக்களின் குறைகளை இன்முகத்துடன் கேட்டு பணியாற்ற வேண்டுமெனவும் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கும், முதல்வரின் முகவரி மனுக்கள், மீதும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் மனுக்கள் மீதும், சிறப்பு கவனம் செலுத்தி, விரைந்து தீர்வு காணும் வகையில் பணியாற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார்கள்.
அதனடிப்படையில், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதோடு, அரசின் சிறப்புத் திட்டங்களான காலை உணவுத் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணம் திட்டம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 –திட்டம் போன்ற பல்வேறு சிறப்புத் திட்டங்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பாக தனிக்கவனம் செலுத்தப்படும்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தேவையான முன்னெரிச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பெண்கள் மற்றம் குழந்தைகள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாவட்ட நிர்வாகம், காவல்துறை உள்ளிட்ட அனைத்துத்துறைகளும் ஒருங்கிணைந்து சட்ட ஒழுங்கிற்கு தேவையான தீர்வு காணப்படும்.
ஒவ்வொரு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து, பணிகளில் சுணக்கம் இருப்பின் நேரடியாக கள ஆய்வு செய்து, உடனடியாக சரிசெய்து குறிப்பிட்ட காலத்திற்குள் மக்கள் நலத் திட்டங்களை முடிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காசி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை ஜாகிர் உசேன் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு
புதன் 26, மார்ச் 2025 4:06:47 PM (IST)

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானது: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
புதன் 26, மார்ச் 2025 10:58:11 AM (IST)

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை வழக்கு: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
செவ்வாய் 25, மார்ச் 2025 5:28:42 PM (IST)

நெல்லை சரக டிஐஜி உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
செவ்வாய் 25, மார்ச் 2025 4:32:51 PM (IST)

திருநெல்வேலியில் குழந்தைகளுக்கான நீச்சல் பயிற்சி முகாம்: ஏப்.1ம் தேதி துவங்குகிறது!
செவ்வாய் 25, மார்ச் 2025 12:30:33 PM (IST)

கடந்த 3 மாதங்களில் நாட்டிலேயே அதிக மழையை பெற்றுள்ள தென் மாவட்டங்கள்!
திங்கள் 24, மார்ச் 2025 8:32:18 PM (IST)
